குமாரபாளையம்-B.கொமாரபாளையம் / Kumarapalayam (or) Komarapalayam (or) B. Kumarapayam

Pincode 638183

குமாரபாளையம்(ஆங்கிலம்:Kumarapalayam), பொதுவழக்கில் கொமாரபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து முதல் நிலை நகராட்சியாக செயல்படுகிறது. இது காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் ஈரோடு மாவட்டத்தின் பவானி அமைந்துள்ளது. இந்நகரம் விசைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியாக செல்கிறது.



















இணையத்தளம் :